-ஆர்.கோகுலன் –
குவைத்தின் கைதான் நகரில் இடம்பெற்ற சமையல் எரிவாவு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் இலங்கை பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் இலங்கை பிரஜைகள் தங்கியிருந்த விடுதியொன்றில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இதில் இலங்கை பிரஜைகள் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் இவர்களுள் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெலிமடை குருத்தலாவை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே உயிரிழந் துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் கள் தங்கியிருந்த அறையிலுள்ள சமை யல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்தபோது இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

