கூட்டு எதிர்க்கட்சியின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும்! பிரதமர்

கூட்டு எதிர்க்கட்சியின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (10) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

கூட்டு எதிர்க்கட்சியினர் சுயாதீனமாக இயங்குவது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை குறித்து தனித்து தீர்மானம் எடுக்க முடியாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் இது குறித்து கலந்தாலோசித்து, அடுத்த நாடாளுமன்றத் கூட்டத் தொடரின் போது தீர்வு வழங்கப்படும்.

கூட்டு எதிர்க்கட்சியினரின் கோரிக்கை குறித்து சபாநயாகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் கூட்டு எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்க அனுமதியளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.