கொரியாவில் மீன்பிடித் தொழில் புரிய விருப்பமா?

15வது கொரிய மொழி பரீட்சையின் மீன்பிடி பிரிவில் வேலை வாய்ப்பு தொடர்பிலான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 19ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி 21ம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தங்காலை, காலி, மாத்தறை, சீதுவ மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளிலுள்ள பயிற்சி மத்திய நிலையங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

இதேவேளை 18 வயது முதல் 39 வயது வரையானவர்கள் மற்றும் மீன்பிடித்துறையில் அனுபவம் உள்ளவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என, வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

இது குறித்த மேலதிக தகவல்களை www.slbfe.lk என்ற இணையத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.