கொழும்பில் 12 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

கொழும்பு அண்மித்த சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய பொரலஸ்கமுவ நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள், கோட்டை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள், மஹரகம, கோட்டை கொஸ்வத்த, பத்தரமுல்லை, மாலபே, ஜயவடனகம, தலவத்துகொட, ஹோகந்தர, கலபலுவாவ  ஆகிய பகுதிகளிலேயே நாளை நண்பகல் 12 மணியிலிருந்து தொடர்ந்து 12 மணித்தியால குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தியவசிய திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதால் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை வெள்ளவத்தை மற்றும் பொரளை ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எனவே நீர் வெட்டின் பின்னர் சிரமங்களுக்கு உள்ளாகாமல் முன்தினமே நீரை சேமித்து வைக்கும் படியும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.