Breaking
Fri. Dec 5th, 2025
புதிய போக்குவரத்து நடைமுறைகள் அறிமுகம் செய்துள்ளமையால், கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனடிப்டையில் கொழும்பு புறக்கோட்டையை நோக்கி செல்லும் வாகனங்கள் சற்றும் நகர முடியாத வகையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வெள்ளவத்தை, பம்பலபிட்டி, கொள்ளுபிட்டி ஆகிய பகுதிகளிலும் காலி வீதியிலும் கடுமையான வாகன நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றன. இதனாலேயே தற்போது அதிக வாகன நெரிசல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தினத்தன்று விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதனை முன்னிட்டு இன்று ஒத்திகையும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் காலி வீதியில் பயணிக்கும் சாரதிகள் மேற்படி போக்குவரத்து திட்டங்களையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

By

Related Post