Breaking
Fri. Dec 5th, 2025

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையை அண்மித்த பகுதிகளில் நாளை 10 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய அதுல்கோட்டை, உடஹாமுல்ல, மிரிஹான, நுகேகொடை, பாகொடை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணித்தொடக்கம் இரவு 7 மணி வரை குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post