Breaking
Sat. Dec 6th, 2025
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாரியளவிலான ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் இவ்விசாரணையானது தற்போது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.
குறித்த விசாரணைகளின் நிமித்தம் கோட்டா காலை 10 மணியளவில் அங்கு சென்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ரக்ன லங்கா நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேவையான வாக்குமூலத்தை பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Post