Breaking
Fri. Dec 5th, 2025

பாதுகாப்புச் செயலாளர் பதவி தனக்கு வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் பதவி சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று  இடம்பெற்ற ஊடக நிகழ்ச்சியொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறிப்பாக இராணுவத்தை விட்டு தப்பியோடி, பின்னர் தமையனின் செல்வாக்கை பயன்படுத்தி பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்த ஒருவரது ஆசனத்தில் தான் அமரமாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். பீல்ட் மார்ஷல் எனும் உயரிய பதவியின் கௌரவத்தை தான் இழக்க விரும்பவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Post