Breaking
Fri. Dec 5th, 2025
வவுனியா வைத்தியசாலையின், வைத்தியர்கள் தங்கும் விடுதியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை கோமா நிலையில் மீட்கப்பட்ட வைத்தியர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா வைத்தியசாலையில் பணிபுரிந்து விட்டு அவரது விடுதிக்குத் திரும்பிய வைத்தியர் தொடர்பில் பின்னர் எவ்வித தகவலும் கிடைக்கப் பெறவில்லை.

இதனால், சந்தேகமடைந்த வைத்தியசாலை நிர்வாகம், வைத்தியரின் விடுதி அறையின் பூட்டை உடைத்து பார்த்த போது குறித்த வைத்தியர் கோமா நிலையில் வைத்தியசாலை ஊழியர்களால் மீட்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் நேற்றுக் அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கொழும்பிலிருந்து வரும் சடலம் வவுனியா வைத்தியசாலையில் சுகாதார அதிகாரி பணிமனையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு சொந்த ஊரான முள்ளியவளைக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரியவருகிறது.

By

Related Post