சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது

மன்னார் – விடத்தல் தீவ கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்களை கடற்படையினர் நேற்று (25) கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து கண்ணாடியிலை படகு, ஜி.பி.எஸ் கருவி மற்றும் தங்கூசி வலை ஆகியன கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.