Breaking
Fri. Dec 5th, 2025

இர்ஷாத் றஹ்மத்துல்லா

மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேச செயலகப் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சதொச விற்பனை நிலையத்தை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதின் இன்று திறந்து வைத்தார்.

பிரசித்தி பெற்ற மடு மாத ஆலயத்திற்கு வருகைத்தரும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களினது நலன் கருதியும்,பிரதேச மக்களின் நன்மை கருதியும் அமைச்சர் இந்த விற்பனை நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட நிறுவனங்களில் சதொச நிறுவனமும் ஒன்றாகும.100 நாள் வேலைத்திட்டத்திற்கமைவாக இந்த சதொச நிறுவனங்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனன் பணிப்பரைக்கமைய பதுளை ஹாலிஎல உள்ளிட்ட பல பிரதேசங்களில் திறந்து வைக்கப்பட்டன.

மடு பிரதேசத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் இதனை இன்று திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post