சமயத் தலைவர்களின் உதவி அவசியமானது – மைத்திரி

சமாதானத்திற்கான சர்வதேச சமய மாநாட்டின் பிரதிநிதிகள் குழு இன்று (21) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர். சகல இனங்களுக்கிடையேயும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு சகல சமயத் தலைவர்களினதும் உதவி அவசியமானது என ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.