சார்க் மாநாடு ஒத்திவைப்பு

19ஆவது சார்க் மாநாட்டை தள்ளிவைப்பதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

19ஆவது சார்க் மாநாடு  எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானின் இஸ்லாமபாத் நகரத்தில் இடம்பெறவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாநாடு இடம்பெறும் திகதி விவரங்கள்  இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலை காரணமாக மாநாட்டை புறக்கணிக்க போவதாக இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் தெரிவித்திருந்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.