Breaking
Fri. Dec 5th, 2025
உலகப் புகழ்பெற்றதும் யுனெஸ்கோவினால் உலகின் வரலாற்று பாரம்பரியங்களுள் ஒன்றாக அடையாளம் காட்டப்பட்டதுமான இலங்கையின் சிகிரியா ஓவியங்கள் அழியும் அபாய நிலையில் இருக்கின்றன என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
தொல்பொருளியல் திணைக்களத்தினால் இந்த ஓவியங்கள் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை. இதனாலேயே இந்த அழிவு அபாயம் ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்படுகின்றது.
சிகிரியாவில் பல ஓவியங்கள் அழிவடைந்து விட்ட நிலையில் தற்போது 22 ஓவியங்களே இருக்கின்றன. இவையும் சரியான பராமரிப்பு இல்லாமல் அழிந்து போகும் நிலையில் உள்ளன.
இலங்கையின் முக்கியமான சுற்றுலா தளமாக இருக்கும் சிகிரியா ஓவியங்களைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலாவணியை குறிப்பிடத்தக்களவு நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

Related Post