Breaking
Sun. Dec 7th, 2025
ஏ.டி.எம். என்றாலே நம் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை தேவைக்கேற்ப எடுக்கப் பயன்படும் ஒரு இயந்திரம் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால் சிங்கப்பூரில் தற்போது புதிதாக இரண்டு ஏ.டி.எம். மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பணத்திற்குப் பதிலாக ஜொலிக்கும் தங்கம் வெளிவருகிறது.
சிங்கப்பூரில் உள்ள வேர்ல்டு சென்டோசா அண்டு மரியான பே சாண்ட் ரிசார்ட்டில் இரண்டு ஏ.டி.ஏம். மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. உலகத்தரம் வாய்ந்த சுவிஸ் நகை சுத்திகரிப்பாளர்களால் சுத்தம் செய்யப்பட்ட தங்கத்தை இந்த இரண்டு ஏ.டி.எம். மையங்களும் வழங்குகிறது.
இந்த ஏ.டி.எம். மையத்தில் ஒரு கிராம் தங்கம் 100 டாலருக்கும், 10 கிராம் தங்கம் 660 டாலருக்கும் விற்கப்படுகிறது. இதே போன்ற மேலும் இரண்டு அல்லது மூன்று தங்கம் வழங்கும் ஏ.டி.எம்.-களை திறக்க உத்தேசித்துள்ளதாகவும் அதை தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஏ.டி.எம். மையம் தான் ஆசியாவிலேயே முதல் தங்கம் வழங்கும் மையம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post