சியாம் கொலை – வாஸ் குணவர்தனவுக்கு பிணை?

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கோடீஸ்வர வர்த்தகரான சியாம் மொஹமட் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர், சுமார் இரண்டு வருடகாலமாக சிறை வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகனும் அடங்குவார்.

எனினும் சட்டவிரோத ஆயுதங்களை தம்மிடம் வைத்திருந்து வழக்கிற்காக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.