Breaking
Fri. Dec 5th, 2025

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையத்திற்கு உட்பட்ட 19 சிறிய நீர்ப்பாசனத்தின் கீழ் பிரதேசத்தில் 550 ஏக்கர் சிறுபோக நெல் பயிரிடப்பட்டு விவசாயிகள் அறுவடை செய்துவருவதாக ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்தின் பெரும்போக உத்தியோகத்தர் ம.சற்குணநேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுகையில்,

இத்திமடுக்குளம பெரியகுளம், ஒதியமலைக்குளம், கோடாரி கல்லுக்குளம் ஆகிய குளங்களின் கீழ், 50 ஏக்கருக்கு மேல் நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டுவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் பெரிய நீர் பாசனக் குளமாக காணப்படும் முத்து ஜயன்கட்டு குளத்தின் புனரமைப்பு வேலைகளின் காரணமாக இம்முறை சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post