Breaking
Fri. Dec 5th, 2025

அனைத்து உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மலையக பகுதிகளில் பலவேறுப்பட்டசிறுவர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த வகையில் இன்று (1) ஹட்டன் டிக்கோயா பிரதேசத்தில் உள்ள வட்டவளைபெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட டிக்கோயா தோட்டப்பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட சிறுவர்களை மேற்படி தோட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையிலும், கற்றல் நடவடிக்கையை முன்னெடுக்கும் வகையிலும் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள மிருககாட்சிசாலை மற்றும் விகாரமாதேவி பூங்கா ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று தாவரங்கள் தொடர்பாகவும், மிருகங்கள் பற்றியும் சிறுவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இதற்கான பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

By

Related Post