Breaking
Fri. Dec 5th, 2025

150 வருடங்கள் பழமையான சுங்க கட்டளைச் சட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ளவது தொடர்பிலான யோசனைகளை முன்வைக்க பொது மக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத் தயாரிப்புக்காக செயற்குழு, தொழிநுட்பக் குழு மற்றும் சட்டமூலக் குழுக்கள்  நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மக்கள் தங்களின் யோசனை முன்வைக்க  ஜூலை மாதம் 11ஆம் திகதி வரை காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த காலத்திற்கு முன்னர் தங்களின் யோசனையை நிதி அமைச்சிடம் எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும் என, அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இது குறித்த மேலதிகத் தகவல்களை பெற்றுக்கொள்ள 0112 484 599 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

By

Related Post