Breaking
Fri. Dec 5th, 2025
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 1ம் திகதி ஜனாதிபதி தாய்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி, நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இந்த விஜயம் அமையவுள்ளது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி 60 பௌத்த பிக்குகளை தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். ஜனாதிபதியுடன் உயர்மட்ட மதத் தலைவர்கள் சிலரும் தாய்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

By

Related Post