Breaking
Fri. Dec 5th, 2025

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுதாபம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பானிய பேரரசர் ஆக்கிஹிட்டோவிற்கு (Emperor Akihito) அனுப்பி வைத்துள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜப்பானிய மக்கள் நம்பிக்கை மற்றும் தைரியத்துடன் பேரிடர்களை கடந்து முன்னேற வேண்டும் எனவும், நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க அரசு என்ற ரீதியில் தாமும் இலங்கை மக்களும் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நிலநடுக்கத்தினால் ஜப்பானிலுள்ள இலங்கை பிரஜைகள் எவருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

By

Related Post