Breaking
Fri. Dec 5th, 2025
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவார்கள் என மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கு நாங்கள் பயமில்லை. இலங்கையின் கடல் எல்லையை மீறும் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும்.

அத்துடன் எல்லை மீறி வந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அதேவளை ஜெனிவா யோசனை மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ , பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட முப்படையினரும் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அமரவீர மேலும் கூறியுள்ளார்.

By

Related Post