ஜோக்கர்களை அனுப்பவேண்டாம்: மஹிந்தவே சபையில் பதிலளிக்க வேண்டும்

-ஜே.ஜீ.ஸ்டீபன்-/ -ப.பன்னீர்செல்வம்-

உடலாகம, அறிக்கை முதல் அமெரிக்காவின் தீர்மானம் வரையிலான அனைத்துக் கொடுக்கல் வாங்கல்கள் ஆவணப்பரிமாற்றங்கள்,  உடன்படிக்கைகள்  ஆகிய அனைத்து செயற்பாட்டு ரீதியான விடயங்களுடனும்  முன்னாள் ஜனாதிபதியான பாராளுமன்ற உறுப்பினர்  மஹிந்த  ராஜபக் ஷவே நேரடித் தொடர்புடையவர். எனவே சமகாலத்தில் எழுந்துள்ள இப்பிரச்சினைக்கு அவரே  பாராளுமன்றத்தில் பிரசன்னமாகி பதிலளிக்க வேண்டுமே தவிர ஜோக்கர்களை ஏவிவிட்டு பதிலளிக்க  முற்படக்கூடாது என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ   இன்று  சபையில்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற  ஐ.நா.அறிக்கை மற்றும்  அமெரிக்காவின் ஜெனீவா தீர்மானம் தொடர்பிலான  சபை ஒத்திவைப்பு  வேளைப் பிரேரணையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது எதிர்க்கட்சி  உறுப்பினர்  தினேஷ் குணவர்த்தன  இடையூறுகளை  ஏற்படுத்தியதுடன்  அமெரிக்காவின்  தீர்மானத்துடன் இணக்கம்  ஏற்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் நாடு காட்டிக்கொடுக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.

இதற்குப் பதிலளிக்கும்  வகையிலேயே அமைச்சர் விஜேதாச மேற்கண்டவாறு  தெரிவித்தார்.