ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு றிஷாத் பதியுதீன் என்னோடு சண்டையிட்டார்

அளுத்கம, பேருவளை கலவரம் இடம்பெற்றபோது ஞானசார தேரரை கைது செய்யக்கோரி றிஷாத் பதியுதீன் அமைச்சரவையில் என்னோடு சண்டையிட்டபோது அவ்வாறு கைது செய்தால் அரசைவிட்டு வெளியேறுவேன் எனக்கூறியவர்கள் தற்போது நல்லாட்சி எனக்கூறிக்கொள்ளும் அரசில் பிரபல அமைச்சர்களாக உள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

அவரது காரியாலத்தில் முஸ்லீம்களை நேற்று முன்தினம் (6) சந்தித்த பின்னர் முக்கியஸ்தர்கள் சிலருடன் கலந்துரையாடலில் இதனை அவர் குறிப்பிட்டார்.
ஞானசார தேரரை பேருவளை கலவரம் இடம்பெற்ற அப்போது நீங்கள் கைதுசெய்திருக்கவேண்டும் என அங்கு கருத்து வெளியிடப்பட்டமைக்கு பதில் அளித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர்..
அலுத்கம பேருவளை கலவரம் இடம்பெற்ற போது ஞானசார தேரரை கைது செய்யக்கோரி ரிஷாட் பதியுதீன் அமைச்சரவையில் என்னோடு சண்டையிட்டார் அதை அப்போது எங்கள் அமைச்சரவையில் இருந்த ரவுப் ஹக்கீம் பைஸர் உள்ளிட்ட பலர் அறிவார்கள் அப்பொது அவரை கைது செய்தால் அரசைவிட்டு வெளியேறுவேன் என பாடலி சம்பிக்க என்னோடு சண்டையிட்டார். அவருடைய கட்சியும் வெளியேறுவதாக குறிப்பிட்டார்.
அப்பொது பொது பலசேனா அமைப்புக்கு கூட்டம் வைக்க ஹெல உறுமயவே அனுமதி பெற்றுக்கொடுத்தது. இப்பொது நாம் இவற்றின் பின்னால் இருந்தாக கூறுவதால் அவை உண்மையாகாது அவைகளை முடியுமானால் நிரூபிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.