Breaking
Fri. Dec 5th, 2025

முதுமையடையும் போது மூளையில் உள்ள அணுக்கள் செயலிழப்பதால் ஏற்படும் டிமென்ஷியா நோய் தொடர்பில்  அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை தௌிவுபடுத்தும் நிகழ்வொன்று  மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (28) நடத்தப்பட்டது.

மாத்தளை மாவட்டச் செயலாளர் திருமதி ஈ.ஈ.சீ விதானகமாச்சி தலைமையில் காலை 10.00 மணி தொடக்கம் 11.00 மணி வரை அரச அதிகாரிகளுக்கும் 11.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை பொது மக்களுக்கும் டிமென்ஷியா தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இலங்கை அல்ஸிமஸ் மன்றத்தின் வைத்தியர் ஹர்ஷன இந்நிகழ்வில் வளவாளராக கலந்துகொண்டார்.

மாத்தளை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் ஆகியவற்றில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் 500 இற்கும் மேற்பட் பொதுமக்கள் கலந்துகொண்டதுடன், மகளிர் மற்றும்  சிறுவர் விவகார அமைச்சின் மாத்தறை மாவட்ட ஆலோச அதிகாரி யு.எம்.ஏ. தமயந்தி இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.

By

Related Post