தகவல் அறியும் சட்டத்திற்கு சபாநாயகர் கையெழுத்திட்டார்

தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கையெழுத்திட்டுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டமூலமானது அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த யூன் மாதம் 24 ஆம் திகதி தகவலறியும் சட்டமூலம் சில திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரிய அச்சட்ட மூலத்தில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க தஸாநாயக்க, பிரதி பொதுச் செயலாளர் நீல் இட்டவெல ஆகியோரும் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.