Breaking
Fri. Dec 5th, 2025
தந்தை எதிர்பார்த்த அமைச்சுப் பதவி எனக்கு கிடைத்துள்ளதாக பெருந்தேட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இளைய தலைமுறையினரின் காணி மற்றும் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க சகல முயற்சிகளும் எடுக்கப்படும் என நவீன் திஸாநாயக்க தலவாக்கலை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
1977ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் தனது தந்தை காமினி திஸாநாயக்க இந்த அமைச்சு பதவியை எதிர்பார்த்திருந்தார்.
அந்தக் காலத்தில் காணப்பட்ட மிகவும் பலம்பொருந்திய அமைச்சு பெருந்தோட்டத்துறை அமைச்சாகும். எனினும் இன்று அந்த நிலைமை மாறியுள்ளது. ஏனெனில் பல தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டுள்ளன.
பெருந்தோட்டத்துறையில் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் கடமையாற்றி வருகின்றனர். பெருந்தோட்டத்துறை ஊழியர்கள் இன்று நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த மக்கள் எம்மிடமிருந்து சேவைகளை எதிர்பார்க்கின்றனர்.
எனவே பெருந்தோட்டத்துறையை புதிய பரிமாணமொன்றுக்கு நகர்த்த வேண்டும். பல்வேறு காரணிகளினால் பின்னடைவை எதிர்நோக்கி வரும் பெருந்தோட்டத்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். புதிய அரசாங்கத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்திற்கு அபிவிருத்தியின் நலன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Post