முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீன் கொலை வழக்கு விசாரணையில் அரச சாட்சியாளராக மாற இளைப்பாறிய பொலிஸ் அதிகாரி ஒருவர் இணக்கம் வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் உயர்மட்டத்தை கோடிட்டு அரசாங்க பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி, விசாரணை அதிகாரிகளிடம் தமது இணக்கத்தை வெளியிட்டுள்ளார்.
எனினும் இன்னும் பொலிஸ் தரப்பு தமது முடிவை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதற்காக குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட வரப்பிரசாதங்கள் வழங்கப்படமாட்டாது என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நாரஹன்பிட்டி முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா, உயர்மட்ட பணிப்புரையின் அடிப்படையிலேயே தாம் இந்த கொலையின் விசாரணை தன்மையை மாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.

