Breaking
Fri. Dec 5th, 2025

முன்னாள் றக்பி வீரர் வஸிம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார்.

சீசீடிவி கமரா மூலம் அடையாளம் காணப்பட்ட அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தாஜூதீன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சீசீடிவி கமராவின் படங்கள் கிடைத்துள்ளன.

இவை தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவின் சாரதியாக இருந்த இராணுவ வீரர் உட்பட இதன் பின்னர் பலர் இந்த மரணம் தொடர்பில் கைது செய்யப்படவுள்ளனர்.

குறித்த சாரதி தற்போது திருகோணமலை இராணுவ முகாமில் கடமையாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post