மன்னார் தாராபுரம் அல் – மினா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர், திறனாய்வு விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று முன்தினம் (18) கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


