Breaking
Sat. Dec 6th, 2025

அல் மனார் ஊடகப்பிரிவு

தேசிய தொழிற் தகைமை ஊடாக தகவல் தொழில்நுட்பத்துறையில் இளைஞர் விவகார மற்றும் திறனபிவிருத்தி அமைச்சின் தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றுக்கு சென்று துறைசார் பட்டதாரியாக வரவிரும்புவோருக்கான இலவச கருத்தரங்கொன்று எதிர்வரும் 15.10.2014 புதன் கிழமை மாலை 4:00 மணிக்கு அல் மனார், அர் ராஷித் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. 

இம்முறை க.பொ.த. உயர் தரப்பரீட்சை எழுதியவர்களும், தகவல் தொழில் நுட்பத்துறையில் பல்கலைக்கழகம் செல்லவிருப்பவர்களும் இக்கருத்தரங்கில் பங்கு கொள்ள முடியும்.

மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் நூறு மாணவர்களை முதன்மைப்படுத்தி இச்செயற்றிட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தேசிய தொழிற் தகைமை மட்டம் 3 அல்லது 4 க்கு உரிய கணனி அறிவுள்ளவர்களும் வெளிவாரியாக பரீட்சை எழுதி மூன்றாம் நிலைக்கல்வி ஆணைக்குழுவினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் பெறவும் வழியேற்படுத்திக் கொடுக்கப்படும்.

அன்றைய தினம் தேசிய தொழிற் தகைமை மட்டம் 3 க்கான தரவுகள் பெறப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

எனவே, சகல இளைஞர், யுவதிகளும் அல் மனார், அர் ராஷித் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 15.10.2014 புதன்கிழமை இடம்பெறவிருக்கும் இலவச கருத்தரங்கில் பங்கு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

Related Post