தேங்காய் திருட முயற்சித்தவர் சுட்டுக் கொலை

கம்பஹா இம்புல்கொட பகுதியில் உள்ள தோட்டத்தில் தேங்காய் திருட முயற்சித்த நபர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் தேங்காய்களை திருட முயற்சித்ததை கண்ட தோட்ட பாதுகாவலர் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த நபர் 46 வயதுடையவர் என பொலிஸார் கூறியுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் இம்புல்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்