தேசிய வனத்திற்குள் குப்பைக் கொட்ட முயற்சித்தவர்கள் கைது

பொலன்னறுவை-கல்லெல்ல தேசிய வனத்திற்குள் லொறி ஒன்றின் மூலம் குப்பைக் கொட்ட முனைந்தவர்கள், வனஜீவராசிகள் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த லொறியானது சட்டவிரோதமாக குறித்த வனப்பகுதிக்குள் நுழைந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வனத்திற்குள் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டும் நடவடிக்கை பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் இதன்போது மற்றுமொரு ட்ரக் வண்டியொன்றில் குப்பை கொட்டுவதற்கு வந்தவர்களும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் இன்று பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.