Breaking
Fri. Dec 5th, 2025

பொதுபல சேனா இயக்கம்தனியான ஓர் அரசியல் கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட உள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியொன்றுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளா கலகொடத்தே ஞானசார தேரர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலன்த விதானகே ஆகியோர் தேர்தல் ஆணையாளரை நேற்று சந்தித்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
வடக்கு மாகாணத்தை தவிர ஏனைய அனைத்து மாகாணங்களுக்கும் வேட்பாளர்களை களமிறக்க பொதுபல சேனா திட்டமிட்டுள்ளது.

Related Post