Breaking
Fri. Dec 5th, 2025

மருதமுனை 1 ம் வட்டாரத்தைச் சேர்ந்தவரும் கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும் தலைவர் மர்ஹூம் அஸ்ரப்போடு இணைந்து செயல்பட்டவருமாகிய அல்ஹாஜ் நெய்னா முஹம்மட் JP அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிஷாட் பதியுத்தீன் அவர்களுடைய வழிகாட்டலின் கீழ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான அமீர் அலி முன்னிலையில் இணைந்து கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் விசேட பிரதிநிதியாக தவிசாளர் அமீர் அலி அவர்கள் நேற்று முன்தினம் 21.01.2017 மருதமுனையிலுள்ள தொழிலதிபர் அல்ஹாஜ் நெய்னா முஹம்மட் இல்லத்திற்கு சென்று இப்பிரதேச பிரமுகர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

தொழிலதிபர் நெய்னா முஹம்மட் அவர்கள் பெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பிற்கு பின்னாள் அல்ஹாஜ் றிஷாட் பதியுத்தீன் அவர்களை ஓர் நேர்மையான தலைவராக தன்னுடைய நீண்ட அவதானிபில் அவரையும் அந்த கட்சியையும் மனப்பூர்வமாக ஏற்று கொள்வதாக அவர் கருத்து தெரிவித்தார்.

எதிர் காலத்தில் தலைமைக்கும் கட்சிக்கும் என்னால் முடிந்த அனைத்து பங்களிப்பையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக மேலும் தெரிவித்தார்.

16194995_1339527516108937_2977839767340465113_n

By

Related Post