நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் பாம்பு

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இருந்து விரியன் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று இது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நூலகத்துக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் பொது மின்தூக்கிக்கும் இடையிலுள்ள பூஞ்சாடி ஒன்றுக்குள் இருந்து இது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிரடிப்படையினர் வழமையாக மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கையின் போது இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.

ஏற்கனவே இரண்டு தடவைகள் நாடாளுமன்றத்துக்குள் பாம்புகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் ஒரு தடவையில் மூன்றாம் மாடியில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இருந்து பாம்பு ஒன்று மீட்கப்பட்டது.