நாடு திரும்புகிறார் ராஜித

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (16)  நாடு திரும்புகிறார்.
சிங்கப்பூர் மவுன்ட் எலிசபத் மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்காக சென்றிருந்த ராஜித சேனாரத்ன சிகிச்சை வெற்றியளித்த நிலையில் இன்று நாடு திரும்பவுள்ளதாக அமைச்சரவை தரப்புக்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கடந்த மாதம் 19ஆம் திகதி திடீரென்று மாரடைப்புக்குள்ளான சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன விஷேட விமானம் மூலம் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமைச்சர் நாடு திரும்பிய உடன் அரசியல் நடவடிக்கைகளிலும், தமது அமைச்சு வேலைத்திட்டங்களிலும் வழமை போல ஈடுபடவுள்ளார் என அவரது பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.