Breaking
Fri. Dec 5th, 2025

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படஉள்ளார்.

நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமான நிறுவனம் ஊடாக முறைகேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டார்.

தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த போதே நிதி மோசடி விசாரணை பிரிவினரால் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நாமல் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post