நோயாளரை பார்க்கச் சென்ற இருவர் வைத்தியசாலையில் கைது

மாரவில வைத்தியசாலைக்கு  மதுபோதையில் நோயாளர் ஒருவரை பார்ப்பதற்கு சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வென்னப்புவ பகுதியைச்  சேர்ந்த நபர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்  பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.