Breaking
Fri. Dec 5th, 2025
பௌத்த மதத்தில் செய்யக்கூடாதென கூறப்பட்டுள்ள ஐந்து மகா பாவங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்துள்ளதாக மத்திய மகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொலை, கொள்ளை, களவு, காமம், தெய்வ நிந்தனை என அனைத்து பாவங்களையும் இவர் செய்துள்ளதாக குறிப்பிட்ட அசாத் சாலி, மக்கள் இதனை நன்கு அறிவர் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், ஒரு ஜனாதிபதியாக பதவி வகித்த மகிந்த தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அவரது மதிப்பை குறைத்துக் கொண்டுள்ளதாகவும் இதன்போது குறிப்பிட்டார்.

Related Post