படகுச் சேவைக்கு பணம் செலுத்த வேண்டாம் : அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள படகு சேவைகளுக்கு பொதுமக்கள் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்த வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்பொழுது, வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு தனியார் படகுகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த சகல படகுகளுக்குமான கொடுப்பனவை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமே வழங்குகின்றது.