Breaking
Fri. Dec 5th, 2025

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம் அடங்கிய கைநூல் அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ளது.

புதிய பாடநெறிகள் மற்றும் ஏனைய பாடநெறிகள் தொடர்பான அனைத்து விபரங்களும் உள்ளடக்கப்பட்டு இந்த கைநூல் விநியோகிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை எதிர்வரும் ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்க உத்தேசித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் பீ.ஏச்.எம் குணரத்ன கூறியுள்ளார்

Related Post