பழுதடைந்த பொருட்களை விற்கும் வர்த்தகர்கள் பற்றிய தகவல்களை வழங்கினால் சன்மான

பொருட்களை பதுக்கி வைப்போர், பழுதடைந்த, தரம் குறைந்த, காலாவதியான பொருட்களை விற்பனை செய்வோர் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு நிதிச் சன்மானங்கள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் நுகர்வோர் பாதிக்கப்படுவதனை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ள விசேட பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையின் பேச்சாளர் ஒருவர் இந்த தகவல்களை கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ளார்.