Breaking
Fri. Dec 5th, 2025

– க.கிஷாந்தன் –

ஹட்டன் நகரத்திலிருந்து இன்று (3) காலை 7.30 மணியளவில் டயகம நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று பாடசாலை மாணவன் மீது மோதியதால் மாணவன் படுகாயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவருவதாவது,

டிக்கோயா தரவளை பகுதியில் 8 வயதுடைய மாணவன் ஒருவன் தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்லும் வேளையில் ஹட்டனில் இருந்து டயகம நோக்கி பயணித்த தனியார் பஸ் மாணவனின் மீது மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

By

Related Post