பாடசாலை ஆதிபருக்கு விளக்கமறியல்!

கண்டி – கன்னொறுவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை  பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற அதிபரையும் ஆசிரியரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் 51 வயதுடைய அதிபரும் 42 வயதுடைய ஆசிரியருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை இன்று கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.