பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள குப்பைகள் நாளைய தினத்திற்குள் முற்றாக அகற்றப்படும்

கொழும்பில் ஏற்பட்ட வௌ்ளத்தினால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை நாளைய தினத்திற்குள் (10) முற்றாக அகற்ற முடியும் என சிவில் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

முப்படையினர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உதவியுடன் இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் வஜிர குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இதுவரை சுமார் 250 பகுதிகளில் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களம், கொலன்னாவை பகுதியின் சில இடங்களில் குப்பைகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.