Breaking
Fri. Dec 5th, 2025

அஸ்ரப் ஏ சமத்

வில்பத்து வனத்தில் முஸ்லிம்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்ரியிடம் சில கடும்போக்காளர்களால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விடயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இடம்பெற இடமளிக்க முடியாது என பெருந்தோட்ட துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.
மத்திய மாகாண சபை உறுப்பினர்  ஆசாத் சாலியின் முன்னாள் கண்டி மாவட்ட அமைப்பாளர் மடவளை ஹனீப் அவர்களுக்கு கிரியல்ல அவர்களின் பாததும்பற ஹரிஸ்பத்துவ முஸ்லிம் விவகார இணைப்பு செயலாளராக நியமனம் வழங்கும் நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் வடக்கு முஸ்லிம் மீள்குடியேற்றவிடயத்தில்  ஆளும் கட்சி எதிர்கட்சி பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு தெளிவின்மை இருக்கிறது .
வடக்கு முஸ்லிம்கள் விடயத்தில் தன்னை அர்பணித்து செயலாற்றும்  அமைச்சர் ரிசாத் பாராளுமன்ற குழுவொன்றை ஸ்தலத்துக்கு அழைத்து சென்று ஒரு தெளிவினை வழங்க ஏற்பாடு செய்யும் படியும் பாராளுமன்ற சபை தலைவரான நான் ஆளும் கட்சி எதிர்கட்சி பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவொன்றை அங்கு அழைத்துவர சகல ஏறபடுகளையும் செய்வதாகவும் முஸ்லிம்களுக்காக நானும் ஸ்தலத்துக்கு நேரடி விஜயம் செய்ய தயார் எனவும்  குறிப்பிட்டார்.
அமைச்சரின் முஸ்லிம் விவகாரங்களுக்கு பொறுப்பான தென்னை பயிர்செய்கை தலைவர் ஹிதாயத் சத்தார் அவர்களை இந்த ஏற்பாடுகளுக்காக முன்னின்று முன்னெடுக்க உத்தவி ட்டுதுள்ளார்.

Related Post