பிரசார நடவடிக்கைகளில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார்

ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்க மாட்டார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அவர் கட்சிப் பணிகளில் ஈடுபடுவார் என்றும் அவர் அனைத்து மக்களின் ஜனாதிபதி என்பதால் பிரசாரப் பணிகளில் பங்கெடுக்கமாட்டார் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.