Breaking
Fri. Dec 5th, 2025
ஜப்பானிய அரசாங்கத்தின் விசேட பிரதிநிதியாக இலங்கை வந்துள்ள மொட்டோ நொகுச், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

நேற்று மாலை அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜப்பானிய அரசாங்கத்தின் விசேட அலுவலகத்தின் பிரதிநிதியான மொட்டோ, பிரதமருடன் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

இந்த நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் உள்ளூர் பொறிமுறையின் கீழ் விசாரணைகள் செயற்படுத்தவுள்ளமை குறித்து மொட்டோ நொகுச் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணை தொடர்பில் முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக மொட்டோ நொகுச், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மொட்டோ நொகுச், நேற்று மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post