பிரித்தானிய பாதுகாப்பு உத்தியோகத்தர் தென் பகுதியில் உயிரிழப்பு

காலி துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள கப்பலில் சேவையாற்றிய பிரித்தானிய நாட்டு பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மர்மமான முறையில் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி – உனவட்டுன சுற்றுலா விடுதியொன்றிலிருந்து நேற்றைய தினம் (09) அவரது சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

காலி துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள குறித்த கப்பல் மீண்டும் பயணத்தை  ஆரம்பிக்கும் வரை இந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் உனவட்டு சுற்றுலா விடுதியில்  தங்கியுள்ளார்.

இந்த நிலையிலேயே குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மர்மமான முறையில்  உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார்  குறிப்பிட்டனர்.

சடலம் கராபிட்டிய வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.